அச்சுறுத்தும் அவுட்சோர்சிங்! | Outsourcing Method in Neyveli Lignite Corporation - Junior Vikatan | ஜூனியர் விகடன்

அச்சுறுத்தும் அவுட்சோர்சிங்!

மத்திய அரசு நிறுவனமே பாதை மாறும் அவலம்

னியார் நிறுவனங்கள் பலவும் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு பணிகளை ‘அவுட்சோர்சிங்’ முறையில் வேறு நிறுவனங்களுக்குக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளன. இதேபாணியில், மத்திய அரசின் நிறுவனமும் செல்வது கடலூர் மாவட்டத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார்மயத்தை நோக்கிப் பயணிப்பதால் இங்கு பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மத்திய அரசுக்குச் சொந்தமான நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனம், லாபகரமாக இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிவருகிறது. காமராஜர் முதல்வராக இருந்தபோது, மிகவும் பின்தங்கிய இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக, 1956-ம் ஆண்டு என்.எல்.சி ஏற்படுத்தப்பட்டது. திறந்தவெளி நிலக்கரி சுரங்கம் மற்றும் முதல் அனல்மின் நிலையம் ஆகியவை அப்போது உருவாக்கப்பட்டது. 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அனல்மின் நிலையத்தில் தற்போது 4,990 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ராஜஸ்தான், ஒடிஷா எனப் பிற மாநிலங்களிலும் கால் பதித்துள்ளதால், ‘என்.எல்.சி இந்தியா’ என இது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 1,300 கோடி லாபம் ஈட்டும் இந்த நிறுவனம் இந்தியாவின் பெருமைகளில் ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick