‘ஸ்லீப்பிங் செல்’ உறுப்பினர்கள்... ஸ்கோர் செய்த தினகரன்... கெஞ்சும் கொறடா! - சட்டமன்ற சுவாரஸ்யங்கள்

மாண்புக்கும் மதிப்புக்கும் பெயர் பெற்றது தமிழக சட்டமன்றம். இப்போது பட்ஜெட் மானியக் கோரிக்கைக்காக நடைபெறும் கூட்டத்தொடரில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களின் தொகுப்பு இது...

சட்டமன்றத்தில் தன் இருக்கையில் சபாநாயகர் அமர்ந்திருக்கும்போது, அவரது இருக்கைக்கு நேராக எதிர்கொண்டு யாரும் நடந்துவரக்கூடாது என்பது மரபு. எதிர் வரிசைக்குச் செல்ல வேண்டுமென்றாலும் சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும். இப்போது, இருக்கையில் சபாநாயகர் அமர்ந்திருக்கும்போதே குறுக்கும் நெடுக்குமாக உறுப்பினர்கள் உலவி வருகிறார்கள். அவை மரபைச் சொல்லிப் பலமுறை எச்சரித்தாலும், ஆளும் கட்சியினர், எதிர்க் கட்சியினர் என யாருமே அதைக் கண்டுகொள்வதில்லை.

முன்பெல்லாம் சட்டமன்றம் நடைபெறும் நாள்களில், சட்டமன்ற நூலகத்தில் இரவிலும் கூட விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். விவாதங்களுக்கான குறிப்புகள் எடுக்க வேண்டும் எனப் பல உறுப்பினர்களும் அந்த அளவுக்கு நூலகத்தைப் பயன்படுத்திவந்தார்கள். இப்போது, ஒருசிலரைத் தவிர வேறு எந்த உறுப்பினரும் நூலகம் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்