ராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்!

கேரளாவில் மூன்று ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைவதால், புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 21-ம் தேதி நடக்கிறது.

ஆளும் இடது முன்னணிக்கு இரண்டு எம்.பி-க்கள் கிடைத்துவிடுவார்கள். எதிர்க்கட்சியான காங்கிரஸால் ஓர் இடத்தில் வேட்பாளரை நிறுத்தி ஜெயிக்கவைக்க முடியும். காங்கிரஸ் எம்.பி-யும், ராஜ்யசபா துணைத் தலைவருமான பி.ஜே.குரியன், பதவிக்காலம் முடியும் மூவரில் ஒருவர். ‘‘இதுவரை மூன்று முறை எம்.பி-யாக இருந்த அவருக்கு மீண்டும் வாய்ப்பு தரக்கூடாது. புதியவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என்று காங்கிரஸில் குரல்கள் ஒலித்தன.

ஆனால், தங்கள் கூட்டணியில் மீண்டும் சேரவிருக்கும் காங்கிரஸ்-எம் கட்சிக்கு இந்த ஒரு சீட்டை காங்கிரஸ் தலைமை தியாகம் செய்துள்ளது. இதனால், கேரள காங்கிரஸுக்குள் பூகம்பம். காங்கிரஸ் தலைவர்களின் கொடும்பாவி எரிப்பு, படங்களுக்கு அஞ்சலி செலுத்துதல் எனத் தொண்டர்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்