குழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்? | Current Political Status of Karnataka - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/06/2018)

குழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்?

‘‘அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலரும், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் பலரும் பி.ஜே.பி-யில் சேர ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்’’ என எடியூரப்பா கொளுத்திப் போட, மீண்டும் ஒருமுறை குழப்பத்தையும் பரபரப்பையும் கர்நாடக அரசியல் சந்தித்திருக்கிறது.

காங்கிரஸும் ம.ஜ.த-வும் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து, தங்கள் எம்.எல்.ஏ-க்களைக் கூவத்தூர் ஸ்டைலில் ரிசார்ட்ஸில் அடைத்து வைத்துப் பாதுகாத்தனர். அதனால், அந்தக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை இழுத்து பெரும்பான்மையை நிரூபிக்கும் கனவு கலைந்து, இரண்டே நாள்களில் முதல்வர் பதவியை இழந்தார் எடியூரப்பா. இப்போது, அமைச்சர் பதவிக்காக காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகளில் நடக்கும் அடிதடி, கர்நாடக முதல்வர் நாற்காலியை மீண்டும் ஒருமுறை எடியூரப்பா பக்கம் திருப்பிவிட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் ஒன்பது எம்.எல்.ஏ-க்கள் (இவர்கள் ஏற்கெனவே சித்தராமையா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள்) அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக லிங்காயத்துகளைத் தனி மதமாக அறிவித்ததுதான் இந்தச் சிக்கலுக்கு மூலகாரணம் என்கிறார்கள்.