தினகரன் எம்.எல்.ஏ-க்கள்... வளைக்கும் திவாகரன்!

‘அண்ணா திராவிடர் கழகம்’ என்று அதிரடியாக புதிய கட்சியைத் தொடங்கிய திவாகரன், அடுத்த அதிரடியாக தினகரன் பக்கம் போனதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களை ஒட்டுமொத்தமாக வளைக்கப்போகிறார் என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தில்.

அரசியலில் பரபரப்பான செய்தி வரும் என்று கூறிவந்த நிலையில், ஜூன் 10-ம் தேதி ‘அம்மா அணி’யைத் தனிக் கட்சியாக அறிவித்தார் திவாகரன். ‘நிழல் நிஜமாகிறது’, ‘வருங்காலத் தமிழகமே’ என்று திவாகரனின் ஆதரவாளர்கள் மன்னார்குடி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இன்னொருபுறம் புதுமனை புகுவிழா, திருமணம், இப்தார் நோன்பு திறப்பு, கோயில் வழிபாடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜூன் 9-ம் தேதி மன்னார்குடிக்கு வந்தார் தினகரன். ‘நாளைய முதல்வரே’ என்று தினகரனுக்கு அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

ஜூன் 10-ம் தேதி காலை எட்டு மணிக்கு மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ள திவாகரனின் கட்சி அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.      எம்.ஜி.ஆரின் காதல் பாட்டுகள் ஸ்பீக்கரில் ஒலிக்க, முகம் சுளித்த நிர்வாகி ஒருவர், ‘‘தலைவரோட கொள்கைப் பாடல்களைப் போடுங்க’’ என்று கத்தினார். அதன்பிறகு, ‘நான் ஆணையிட்டால்...’ பாடல் ஒலித்தது. ‘‘அண்ணன் வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே அவரது அறையில் ஏ.சி போட்டுவிட வேண்டும்’’ என்று திவாகரன் உதவியாளர் பரபரத்துக் கொண்டிருந்தார். காலை 7.30 மணிக்கெல்லாம் சுந்தரக்கோட்டைப் பண்ணை வீட்டிலிருந்து கிளம்பிய திவாகரன், நேராக மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலுக்குச் சென்று செங்கமலத் தாயார் சன்னிதியில் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், தன் ஆதரவாளர் ஒருவரின் திருமண மண்டபத்தைத் திறந்துவைத்துவிட்டு, கட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick