“அரசுப் பாடநூல்களை தூசுபோல நினைக்கிறார்கள்!”

சாட்டை எடுப்பாரா செங்கோட்டையன்?

‘‘தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்புக்கு புதிய பாடநூல்கள் கொண்டுவரப்பட்டுள்ளதை யும், வரும் ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடநூல்கள் வர உள்ளதையும் ‘சரித்திர சாதனை’ போல பெருமையுடன் சொல்கிறார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். ஆனால், பெருமைக்குரிய அந்தப் பாடப்புத்தகங்களை, தூசு போல தனியார் பள்ளிகள் நினைக்கின்றன. இதை எதிர்த்து அவர் சாட்டை எடுப்பாரா?’’ என்று கொந்தளிக்கிறார்கள் கல்வி ஆர்வலர்கள்.

அரசுப் பள்ளிகளிலிருந்து தனித்து தெரிவதற்கும், அரசுப் பள்ளிகளைவிட தரம்வாய்ந்தது என்று காட்டிக்கொள்ளவும் தனியார் பள்ளிகள் பல உத்திகளைக் கையாள்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று, அரசுப் பாடப்புத்தகங்களைப் புறக்கணிப்பது. அரசுப் பாடத்திட்டம் தரமில்லை என்று சொல்லி இத்தனை வருடங்களாக அவர்கள் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போது, புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள பாடநூல்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு இணையானது என்று சொல்லப்பட்டுவரும் நிலையில், இதையும்கூட பல தனியார் பள்ளிகள் புறக்கணிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர், மெட்ரிக் பள்ளிகளுக்கான இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்