“எரிமலைமீது உட்கார்ந்துகொண்டு எழுதியவர்!”

காஷ்மீரில் ராணுவத்தால் தீவிரவாதத் தலைவர்கள் கொல்லப்பட்டால், அவர்களின் இறுதி ஊர்வலங்களுக்குப் பெரும் கூட்டம் கூடும். பிரிவினைவாத முழக்கங்கள் உச்சகுரலில் எழுப்பப்படும். ஆனால், அதைவிட அதிகக் கூட்டம் ஒரு பத்திரிகையாளரின் இறுதி ஊர்வலத்துக்குக் கூடியது. சொல்லப்போனால், முன்னாள் முதல்வர் முஃப்தி முகமது சயீதுக்கு அஞ்சலி செலுத்தக்கூட இவ்வளவு கூட்டம் வந்ததில்லை. 

‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி, பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மூத்த பத்திரிகையாளரான சுஜாத் புஹாரி, ‘தி ஹிண்டு’ நாளேட்டின் காஷ்மீர் செய்தியாளராக 1997 முதல் 2012 வரை பணியாற்றினார். கடந்த ஆறு ஆண்டுகளாக ‘ஃப்ரன்ட்லைன்’ ஏட்டில் எழுதிவந்தார். ஸ்ரீநகரைத் தலைமையிடமாகக் கொண்டு, ‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்து, அதன் ஆசிரியராகவும் இருந்தார். காஷ்மீர் பிரச்னை குறித்து அவர் எழுதிய பல கட்டுரைகள், உலகின் கவனத்தை ஈர்த்தவை. சென்னையில் உள்ள ‘ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்’ என்ற ஊடகக் கல்வி நிறுவனத்தில் இதழியல் வகுப்புகளையும் அவர் எடுத்துவந்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick