யாருக்கும் பயன்படாத ரூ. 215 கோடி பாலம்!

கொந்தளிக்கும் கோவை

‘‘காந்திபுரத்தில் 190 கோடி ரூபாய் செலவில் மக்களுக்குப் பயனில்லாத வகையில் பாலத்தைக்கட்டி பதற வைத்தவர்கள், இப்போது உக்கடத்திலும் உபயோகம் இல்லாத ஒரு பாலத்தைக் கட்டப் பார்க்கிறார்கள்’’ என்று குமுறுகிறார்கள் கோவை மக்கள்.

கோவை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 2013-ம் ஆண்டு ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டதுதான், ஒப்பணக்கார வீதி முதல் உக்கடம் ஆற்றுப்பாலம் வரையிலான மேம்பாலம் கட்டும் திட்டம். இந்தத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தபோது இருந்த ஆரவாரம், இப்போது இது செயல்பாட்டுக்கு வரும்போது இல்லை. ‘ஆற்றுப்பாலத்தில் உள்ள டோல்கேட்டைத் தாண்டி இந்தப் பாலத்தை நீட்டிக்க வேண்டும். அங்கு வாழும் பூர்வகுடிகளைப் பெருமளவு பாதிக்காத வகையில், பாலத்தின் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்’ என்று ஏராளமான எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்காக ‘உக்கடம் மக்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கம்’ என்ற அமைப்பையே ஏற்படுத்தி போராடத் தொடங்கியிருக்கிறார்கள் மக்கள்.

இது தொடர்பாக இந்தக் கூட்டியக்கத்தைச் சேர்ந்த பார்த்திபனிடம் பேசினோம். ‘‘இந்தப் பாலத்தின் மதிப்பீடு, 215.81 கோடி ரூபாய். மக்களின் வரிப்பணத்தைக் கொட்டிக் கட்டப்படும் பாலம், மக்களுக்குப் பயன்படாமல் போகப்போகுது. பொள்ளாச்சி சாலையும் பாலக்காடு சாலையும் உக்கடம் ஆத்துப்பாலத்தில் சந்தித்து ஒன்றாகி கோவைக்குள் நுழைகிறது. இன்னொரு பக்கம், ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம். ஒப்பணக்கார வீதிக்கும் ஆற்றுப்பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உக்கடம் பேருந்து நிலையம் இருக்கு. அங்கும் போக்குவரத்து நெரிசல், பெரும் தலைவலி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick