அதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி!

ம்பது பைசாவோ, ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ அதிகமாக வசூலிப்பது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழகம் முழுக்க ஒவ்வொரு நாளும் பல லட்சம் ஆவின் பாக்கெட்டுகள் இப்படி அதிக விலைக்கு விற்கப்படுவது நிச்சயமாக மிகப்பெரிய மோசடி. 

ஆவின் விற்பனை நிலையங்களில், ‘பால் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விலைக்கே விற்கப்பட வேண்டும். விலைப்பட்டியல் வைக்க வேண்டும். ஆவின் தயாரிப்புகள் தவிர வேறு எதையும் விற்கக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு பில் தர வேண்டும்’ என்பது விதி. இந்த விதிமுறைகளை மீறிச் செயல்படும் ஆவின் விற்பனை நிலையங்கள், பால் முகவர்கள், தவறு செய்தவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஆவின் நிறுவனத்திடம் கேட்டிருந்தோம்.

ஆவின் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக 2016-ம் ஆண்டு மட்டும் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்துக்கு 30 புகார்கள் வந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றின்மீதும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன எனக் கேட்டிருந்தோம். அதற்கு, ‘நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று இரண்டை வார்த்தைகளில் பதிலை முடித்துவிட்டனர். உண்மை நிலவரத்தை அறிவதற்காக ஜூ.வி செய்தியாளர்கள் தமிழகம் முழுக்கப் பயணித்தனர். பல அட்ராசிட்டிகள் நம் கவனத்துக்கு வந்தன!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick