ஊட்டியை மிரட்டும் அபாயம்... எமனாக மாறும் பழைய பஸ்கள்!

நீலகிரி என்றாலே... ஜில்லென்ற பருவநிலை, எங்கு பார்த்தாலும் பசுமை, சுத்தமான காற்று, எழில் கொஞ்சும் இயற்கை என எத்தனையோ விஷயங்கள் நம் நினைவுக்கு வந்துபோகும். சுற்றுலாப் பயணிகளுக்கு இது சொர்க்கமாக இருக்கலாம். ஆனால், போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி போன்ற அடிப்படைத் தேவைகளே இல்லாமல் அங்கு வசிக்கும் மக்கள் படும் துயரங்கள் ஏராளம்.

சமீபத்தில் ஊட்டியிலிருந்து குன்னூருக்கு சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று, 300 அடி பள்ளத்தில் உருண்டு நொறுங்கியது. அதில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். “விபத்துக்குள்ளான பஸ்ஸில், ப்ரேக் பிரச்னை உள்பட பல்வேறு பழுதுகள் இருந்துள்ளன. பழுதுகள் சரிசெய்யப்படுவதற்கு முன்பே, அதிகாரிகளின் கவனக்குறைவால் இந்த பஸ் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. அதுதான் விபத்துக்குக் காரணம். ‘பழுது காரணமாக, இந்த பஸ்ஸை டி.எம் டெஸ்க்கில் நிறுத்தியிருந்தேன்’ என்று இரண்டு மாதங்களாக அந்த பஸ்ஸை ஓட்டிய டிரைவர் மனோகரன் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்குப் பிறகு, பழைய பஸ்களை இயக்குவதற்கு பயமாக இருக்கிறது. ஓட்டை உடைசல் பஸ்களை ஓட்டச்சொன்னால் எப்படி?” என்று கொந்தளிக்கிறார்கள் நீலகிரி பகுதியில் பணியாற்றும் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick