சி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்! | Police arrest public as CCTV records and photos - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/06/2018)

சி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்!

தூத்துக்குடி வீதியெங்கும் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள போலீஸாரின் எண்ணிக் கையில் ஒருவர் கூடக் குறைக்கப்பட வில்லை. ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், காவல் நிலையங்கள் முன்பும் நிறுத்தப்பட்டிருந்த வஜ்ரா வாகனங்களும் அங்கிருந்து நகரவில்லை. வீடுகளுக்குள் போலீஸார் திபுதிபுவென புகுந்து எந்தக் காரணமும் சொல்லாமல் மக்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன. எனவே, இன்னும் அச்சத்தின் உச்சத்தில் உள்ளது தூத்துக்குடி.  

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற மகேஷை அவரது குமரெட்டியாபுரம் வீட்டுக்குள் புகுந்து கைது செய்துள்ளது காவல்துறை. மகேஷின் அம்மா மாரியம்மாளிடம் பேசினோம், “ஒரு வாரத்துக்கு முன்னால ஒரு வேன் நிறைய போலீஸ்காரங்க வீட்டுக்கு வந்தாங்க. ‘உன் மகனை எங்க..’ன்னு கேட்டாங்க. ‘அவன் ஊருல இல்லைய்யா’ன்னு சொன்னேன். ‘அவன் இருக்குற இடம் உனக்குத் தெரியும், சொல்லு..’ன்னு மிரட்டினாங்க. வீடு முழுவதும் தேடிப் பார்த்துட்டு கிளம்பிப் போயிட்டாங்க. தினமும் ஊருக்குள்ள திடீர் திடீர்னு போலீஸ் வண்டி வருது. கார் சத்தம் கேட்டாலே பயம்மா இருக்கு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க