மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்

‘‘தீர்ப்பு வந்த தினத்தில் பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். வெயிலில் களைப்புடன் வந்து அமர்ந்த அவருக்கு இளநீர் கொடுத்துவிட்டு, ‘‘யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம்?’’ என்று கேட்டோம்.

‘‘தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும்தான். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கொடுத்ததும், ‘இந்த வழக்கிலிருந்தே நான் வாபஸ் பெறப்போகிறேன்’ என்று ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப் போனார். தினகரன் சம்மதத்துடன் இவை எல்லாவற்றையும் அவர்  செய்வதாக அந்த அணியில் சொல்கிறார்கள். ஆனால், தீர்ப்பு வந்த அன்று தினகரன் வீட்டில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டது.’’

‘‘ஏன்?’’

‘‘முரண்பட்ட தீர்ப்பு வந்து, மூன்றாவது நீதிபதிக்கு விவகாரம் போனதும், தினகரன் பக்கம் இருக்கும் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நொந்துபோய் விட்டார்கள். ‘இன்னும் எத்தனை மாதங்களுக்கு இந்த விவகாரம் இழுத்துக்கொண்டு போகுமோ’ என அவர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அப்போதுகூட தினகரன் எந்த சலனமும் இல்லாமல் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார். இது அனைவருக்கும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது எனக் கடந்த முறையே நான் சொல்லியிருந்தேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick