வாதாம் மரங்களே நீதிமன்றம்... பல்லி சகுனமே தீர்ப்பு... - இது நம்ம ஊரு நியாய கோர்ட்!

மெத்தப் படித்தவர்களே சட்டத்தை மீறுகிறார்கள்... எப்படித் தீர்ப்பு வந்தாலும் சர்ச்சை கிளம்புகிறது... உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மாநில அரசுகளே மதிப்பதில்லை... இப்படிப்பட்ட காலகட்டத்தில், தங்கள் ஊரில் உள்ள வாதாம் மரங்களையே நீதிமன்றமாகக் கருதியும், அந்த மரங்களில் அமர்ந்துள்ள பல்லிகள் எழுப்பும் ஓசையையே தீர்ப்பாக மதித்தும், நியாய தர்மத்துடனும், சண்டை சச்சரவுகள் இல்லாமலும் வாழ்ந்து வருகிறார்கள் ஒரு சமூகத்தினர்.

கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட ஒன்றியங்களிலும் உள்ள பல கிராமங்களில் நாயக்கர் சமூகத்தினர் வசிக்கிறார்கள். இப்படி 242 கிராமங்களில் வசிக்கும் இந்தச் சமூக மக்களுக்கும் தலைவராக (சீமை பட்டக்காரர்) கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த பொம்முராஜ் இருந்துவருகிறார். இவர், அந்த 242 கிராமங்களைச் சேர்ந்த நாயக்கர்களுக்கும் கிட்டத்தட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மாதிரி. இந்த சமூகத்தினர் பற்றி இன்னும் இதுபோல பல சுவாரஸ்யமான விஷயங்களைக் கேள்விப்பட்ட நாம், கோடங்கிப்பட்டிக்கு வண்டியை விட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick