அலுமினியத் தட்டே ஆயுதம்... பாக்ஸர் முரளி கொலைக்கு யார் காரணம்? | Rowdy Boxer Murali murdered in Puzhal jail - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/06/2018)

அலுமினியத் தட்டே ஆயுதம்... பாக்ஸர் முரளி கொலைக்கு யார் காரணம்?

தாதாக்கள் மோதலால் நடக்கும் கொலைகள் தமிழகத்துக்குப் புதிதல்ல. ஆனால், தீவிரப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் புழல் மத்திய சிறையில் அது நடந்திருப்பதுதான் பெரும் அதிர்ச்சி. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி பாக்ஸர் முரளியைக் கழுத்தை அறுத்தும், பிறப்புறுப்பைச் சிதைத்தும் கொடூரமாகக் கொலை செய்துள்ளது சிறைக்குள் ‘வாழ்ந்த’ ஒரு டீம்.

சென்னை வியாசர்பாடி பகுதியின் சாமந்திப்பூ காலனியைச் சேர்ந்தவர் பாக்ஸர் முரளி. இவர், கஞ்சா வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவர்மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை என 16 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை ஜூன் 20-ம் தேதி காலையில், குளியலறைக்குள் வைத்துக் கொடூரமாகக் கொலை செய்தது ஒரு கும்பல். கஞ்சா வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரண்ராஜும், அவரின் கூட்டாளிகளான கார்த்திக், ஜோயல், பிரதீப், ரமேஷ் ஆகியோரும் அலுமினியத் தட்டை ஆயுதமாக்கிக் கொடூரமான முறையில் முரளியைக் கொலை செய்தனர்.