குப்பை அள்ளுவதில் மோசடி... குவிக்கிறார்கள் பல கோடி! | Scandal in Shavings Removal work in Chennai Corporation - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/06/2018)

குப்பை அள்ளுவதில் மோசடி... குவிக்கிறார்கள் பல கோடி!

சென்னை மாநகராட்சி கோல்மால்

குப்பையைப் பார்க்கும் நமக்கு, அதன் நுர்நாற்றமும் பிரச்னையும்தான் தெரியும்; ஆனால், அதிகார வர்க்கத்துக்கும் அதைச் சார்ந்தவர்களுக்கும், கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்க உதவும் வைரச்சுரங்கமாக குப்பை தெரிகிறது. ‘குப்பை அள்ளுவதில்கூட இவ்வளவு கோடிகளைக் குவிக்கமுடியுமா?’ என மலைக்கவைக்கிறது, சென்னை மாநகராட்சியில் நடந்திருக்கும் கோல்மால்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 12 மண்டலங்களில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்கிறார்கள். இவை தவிர, மூன்று மண்டலங்களில் மட்டும் குப்பை அகற்றும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் 12 மண்டலங்களில் நாளொன்றுக்கு 3,000 டன் குப்பையை அகற்றுகிறார்கள். இங்கு சராசரியாக ஒரு மண்டலத்தில் 250 டன் குப்பை அள்ளப்படுகிறது. ஆனால், தனியாரிடம் விடப்பட்டுள்ள மூன்று மண்டலங்களில் நாளொன்றுக்கு 2,000 டன் குப்பை அள்ளப்படுகிறது. இங்கு சராசரியாக ஒரு மண்டலத்தில் 650 டன் குப்பை அள்ளப்படுகிறது. 250 டன் எங்கே... 650 டன் எங்கே? இதற்கான பதிலை எதிர்பார்ப்பவர்களுக்காகக் காத்திருக்கிறது, ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க