ஷிப்ட் முறையில் சிட்டி போலீஸ்!

ரலாற்றில் முதன்முறையாக சென்னை மாநகரக் காவல்துறையில், இரவு நேரப்பணிக்கான ‘ஷிப்ட்’ முறை அமலுக்கு வந்துள்ளது. இரவு நேரங்களில் நடக்கும் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பதே இதன் நோக்கம். 2017-ம் ஆண்டில் சாலை விபத்துகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ‘ஜீரோ ஆக்சிடென்ட்’ என்ற திட்டத்தை சென்னைப் போலீஸார் நடைமுறைப் படுத்தினர். அப்போது, ‘தீவிர வாகனத் தணிக்கை’ என்ற செயல்பாடுதான் முக்கியமாக இருந்தது. முக்கிய சாலைகளில் ஆங்காங்கே போலீஸார் நின்று வாகனச் சோதனை நடத்தி, பிடிவாரன்ட் குற்றவாளிகளில் ஆரம்பித்து பைக் திருடர்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள் வரை பிடித்தனர். ஆனாலும் விபத்துகளும், திருட்டும், வழிப்பறிச் சம்பவங்களும் அதிகமானதைப் போலீஸாரால் தடுக்க முடியவில்லை. பைக்குகளில் வந்து வழிப்பறி செய்வது, விபத்துகளைவிட அதிக எண்ணிக்கையைத் தொட்டது.

வீடுகளில் தனியாய் இருக்கும் பெண்களிடம் முகவரி கேட்பது போலவும், குடிக்கத் தண்ணீர் கேட்பது போலவும் நகை பறிப்பில் ஒரு கும்பல் இறங்கியது. இன்னொரு கும்பல், வாக்கிங் போகும் பெண்கள், வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்கள், சாலையில் நடந்து போகும் பெண்கள் எனக் குறிவைத்து இறங்கியது. ஒரே நாளில் ஐந்து இடங்களில் வழிப்பறி என்று சிங்கிள் டிஜிட்டில் ஆரம்பித்த நகைப் பறிப்புகள், இரட்டை இலக்கத்தைத் தொட்டன. இதுபோக, பைக் ரேஸில் பறக்கும் இளைஞர்களாலும் மக்கள் உயிர் பயத்தில் உறைந்து கிடந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இந்த ‘ஷிப்ட் முறை’ கொண்டுவரப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick