புதிய புத்தகங்கள் எப்போது வரும்? | New syllabus Text Books not get to Students - Junior Vikatan | ஜூனியர் விகடன்

புதிய புத்தகங்கள் எப்போது வரும்?

ஆசிரியர்கள், மாணவர்கள் சோகம்

‘‘மாணவர்களுக்குக் கல்வியுடன் சேர்த்து ஒழுக்கமும் கற்றுத் தரப்படும்’’ என்கிறார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். ‘‘அதெல்லாம் இருக்கட்டும்; புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட புதிய புத்தகங்கள் இன்னும் பள்ளிக்கூடங்களுக்கு வந்துசேரவே இல்லையே’’ என்று பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் குமுறுகிறார்கள்.

அதிரடியானவர் எனப் பெயரெடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயசந்திரனைப் பள்ளிக்கல்வித் துறை செயலாளராக நியமித்தபோது, கல்வித்துறை ஆர்வலர்கள் மத்தியில் பொங்கிய மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. வழக்கம்போல, ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொள்ளாததால், பள்ளிக்கல்வித் துறையிலிருந்து அவரை மாற்ற முயற்சி நடந்தது. நீதிமன்ற உத்தரவால் அது தடுக்கப்பட்டு, பாடத்திட்டத்தை மாற்றிய மைக்கும் பணிக்கு தனிப் பொறுப்பாக அவர் நியமிக்கப் பட்டார். அவரது தலைமையின்கீழ் மொத்தம் 143 குழுக்கள் பல மாதங்களாகத் தீவிரமாகப் பணியாற்றின. அந்தக் குழுக்கள் 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை உருவாக்கின. புதிய புத்தகங்களைப் பற்றிய வரவேற்பும் விமர்சனங்களும் ஒரு பக்கம் இருக்க... பள்ளிகள் திறந்து மூன்று வாரங்கள் ஆகியும் புதிய பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை. இதனால், மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, 11-ம் வகுப்பு மாணவர்கள் அதிக பாதிப்பு அடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick