மரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்! | Special Story about Organ mafias - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்!

அச்சுறுத்தும் ஆர்கன் மாஃபியா

புனிதக்கொடையான உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், இங்குதான், ‘சிறுநீரகம் ரூ.10 லட்சம், இதயம் ரூ.40 லட்சம், கல்லீரல் ரூ.60 லட்சம்’ என விலைபேசி விற்கப்படும் அவலம் உள்ளது. இதைக் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் அதிக அளவுக்கு வெளிநாட்டவர்களுக்கு உடல் உறுப்பு கள் தானம் கொடுக்கப்பட்டுள்ளன.

உறுப்பு தானத்தை எப்படிச் செய்வது என விதிமுறைகள் உண்டு.

ஒருவர் அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து, அவரின் உறவினர்கள் உறுப்பு தானம் செய்ய சம்மதித்தால், அவரிடமிருந்து பெறப்படும் இதயம், கல்லீரல், ஒரு சிறுநீரகம் ஆகியவை, அந்த மருத்துவ மனையிலேயே தானத்துக்காகக் காத்திருக்கும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருத்தப் பட வேண்டும். இன்னொரு சிறுநீரகத்தை பொதுவான பிரிவுக்கு அளித்தால், காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் யாருக்காவது அது ஒதுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கும் இதே விதி பொருந்தும்.

குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் தானத்துக்காக யாரும் காத்திருக்கவில்லை என்றால், தானம் தரும் நபர் வசிக்கும் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனை காத்திருப்போர் பட்டியலுக்கு முன்னுரிமை தரப்படும். இப்படி, விதிகள் கச்சிதமாக வகுக்கப்பட்டுள்ளன. இந்திய நோயாளிகள் யாருக்குமே குறிப்பிட்ட அந்த உறுப்பு பொருந்தவில்லை என்றால்தான், வெளிநாட்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட வேண்டும். அதிலும், அவர்கள் ஓராண்டு விசாவில் வந்து, தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களாக இருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick