“200 வீடுகளை இடியுங்கள்!”

மத்திய அரசு கட்டித்தந்த வீடுகளுக்கு ஆபத்து

த்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் வீட்டு வசதி நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட குடியிருப்பை, ஆக்கிரமிப்பு என்று சொல்லி இடிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்தக் குடியிருப்பில் இருப்பவர்கள் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

சென்னை – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி பஸ் நிலையத்துக்குப் பின்புறம், 10 ஏக்கரில் கேந்திரிய விஹார் குடியிருப்பு 1995-ல் உருவாக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர் நலன் மற்றும் வீட்டு வசதி நிறுவனம் (CGEWHO) என்ற அமைப்பின் மூலம் 524 வீடுகள் கட்டப்பட்டு, குலுக்கல் முறையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. வீட்டுக்கான தொகை, ஊழியர்களின் சம்பளத்தில் மாதாமாதம் பிடிக்கப்பட்டது. இவர்களில் பலர் முழுத் தொகையும் செலுத்திமுடித்து ஓய்வே பெற்றிருக்கும் நிலையில், இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick