கழுகார் பதில்கள்!

என்.சுந்தரேசன், திருப்பூர்.

‘ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளாரே?


அது தனது தனிப்பட்ட விருப்பம் என அவரே சொல்லிவிட்டார். மெரினா கடற்கரையில்      எம்.ஜி.ஆர் நினைவகம் இருக்கும் வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்படுகிறது. இதை எதிர்த்தும், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படங்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்தும் ஐந்து வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. இந்த வழக்குகளை விசாரித்தபோதுதான், அவர் இதைச் சொன்னார். ‘‘சில விஷயங்கள் அறநெறிப்படி தவறு. சில விஷயங்கள் சட்டப்படி தவறு. அழகிய மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் மட்டுமல்ல... எதையுமே கட்டக்கூடாது என்பது என் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்த வழக்கில் வாதங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு சொல்வேன்’’ என்றார் இந்திரா பானர்ஜி.

சட்டப்படி தரப்படும் தீர்ப்புகளையே மதிக்காத அரசுகள், ‘அறநெறிப்படி தவறு’ என்று சொல்வதையா கேட்கப் போகின்றன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick