மண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி! - தி.மு.க-வில் திருப்பம் வருமா? | Stalin create Regional Organizing Secretary post in DMK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி! - தி.மு.க-வில் திருப்பம் வருமா?

நாடாளுமன்றத் தேர்தலுக்காக இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டது தி.மு.க. அந்தத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலும் இணைந்தே வரும் என்று தீர்மானமாக கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நம்புவதால், அதற்காக கட்சியின் கட்டமைப்பையே மாற்றும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் ஸ்டாலின். இதன் ஒரு கட்டமாக, தி.மு.க-வில் முதல்முறையாக மண்டல அமைப்புச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்.

அமைப்புரீதியாக தி.மு.க இப்போது தமிழகத்தை 65 மாவட்டங்களாகப் பிரித்துள்ளது.  இதில், பல மாவட்டங்களில் குழப்பங்கள் நிலவுகின்றன. இதுதவிர, நிர்வாக ரீதியாகவும் பல குழப்பங்கள் உள்ளன. ஒரு சட்டமன்றத் தொகுதி இரண்டு மாவட்டங்களில் வருவதால், தேர்தல் பணி செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்றவகையில் கட்சி அமைப்பில் உரிய மறுசீரமைப்பு செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு ஒன்றை அமைத்தார் ஸ்டாலின். கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைத்தலைவர் ஆஸ்டின் ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு, சமீபத்தில் தன் அறிக்கையை ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick