பட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்!

விடுமுறைக்காலம் முடிந்து தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளில், சென்னையில் சில மாணவர்கள் கல்லூரிக்கு பட்டாக்கத்திகளுடன் வந்ததைக் கண்டு போலீஸார் மட்டுமல்ல, பொதுமக்களும் அதிர்ந்துபோயினர்.

கல்லூரிகள் திறக்கப்பட்ட நாளன்று, திருவொற்றியூர் சுங்கச்சாவடியிலிருந்து திருவான்மியூர் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றில் ஏறிய சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு கலாட்டா செய்தபடி வந்துள்ளனர். அதைக் கண்டித்த கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் அவர்கள் தகராறு செய்துள்ளனர். கடற்கரை காமராஜர் சாலையில் எழிலகம் அருகே வந்தபோது, அந்த பஸ்ஸை மறித்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுதான், மாணவர்களிடம் பட்டாக்கத்திகள் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற மாணவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். நோட்டு புத்தகங்களைச் சுமத்து கல்லூரிக்கு வர வேண்டிய மாணவர்களின் பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை ஏந்தி வருவதற்கான காரணம் குறித்து சிலரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick