மதுரையில் எய்ம்ஸ்... மகிழ்ச்சியில் மக்கள்! | People happy for Madurai AIIMS hospital - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/06/2018)

மதுரையில் எய்ம்ஸ்... மகிழ்ச்சியில் மக்கள்!

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது என்ற தகவல், மதுரை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தத் தென்மாவட்ட மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மணிமாறனிடம் பேசினோம். ‘‘மிகக் குறைந்த செலவில் உயர்தரமான சிகிச்சை அளிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையைத் தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முடிவுசெய்தது. அதற்காக, 2015-ம் ஆண்டு தமிழகத்தின் சில மாவட்டங்களை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். கடைசியில், எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சரியான இடம், மதுரை அருகேயுள்ள தோப்பூர் என முடிவு செய்தனர். தஞ்சை, அரியலூர், திருச்சி, கோவை பகுதிகளிலிருந்தும், தென் மாவட்டங்களிலிருந்தும் 3-4 மணி நேரத்தில் மதுரைக்கு வந்துவிடலாம். மேலும், நான்கு வழிச்சாலையை ஒட்டி தோப்பூர் உள்ளது. ரயில் சந்திப்பு, மிகப் பெரிய பஸ் நிலையம், அருகில் விமான நிலையம் உள்ளன. இத்தனை வசதிகள் உள்ள மதுரைதான், சரியான தேர்வு என்று சொல்லப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க