“அமைச்சரைப் பகைத்துக்கொண்டு இங்கே வேலை செய்ய முடியுமா?“ | Sand theft in Amaravati River by Sand Mafias - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“அமைச்சரைப் பகைத்துக்கொண்டு இங்கே வேலை செய்ய முடியுமா?“

காவிரி ஆற்றைக் கபளீகரம் செய்துவிட்டு, இப்போது அமராவதி ஆற்றின் பக்கம் திரும்பியுள்ளது மணல் மாஃபியா கும்பல். இவர்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் ஆசீர்வாதம் இருப்பதாகவும், அதனால் அதிகாரிகளால் இவர்களைத் தட்டிக்கேட்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

அமராவதி அணையில் ஆரம்பித்து மடத்துக்குளம், தாராபுரம் வழியாகச் சுமார் 160 கி.மீ பயணித்து, கரூர் அருகே காவிரியில் கலக்கிறது அமராவதி ஆறு. இந்தப் பகுதி மக்களின் ஒரே குடிநீர் ஆதாரமாகவும், 54 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும் விளங்கும் அமராவதி ஆற்றில், மொத்தம் ஆறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இவற்றின்மூலம் சுமார் 150 கிராமங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், மணல் மாஃபியாக்களின் அட்டூழியத்தால், அமராவதி ஆறு அழிந்துபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick