படுகொலை செய்து ஒரு செல்ஃபி! | Kerala tribal man murder issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/03/2018)

படுகொலை செய்து ஒரு செல்ஃபி!

அழியாத கறையாக ஆதிவாசி மரணம்

கும்பலாகச் சேர்ந்து ஒருவரைக் கொலை செய்வதும், அதை வீடியோவில் பதிவுசெய்து பெருமையுடன் சமூகவலைதளங்களில் பதிவிடுவதும் என்கிற போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் கடந்த ஒரு மாதத்தில் ஆறு பேர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் அட்டப்பாடியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மது. அரிசி திருடியதாகக் குற்றம் சுமத்தி ஒரு கும்பல் அவரை அடித்தே கொன்றது. மதுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை, ‘மதுவின் வயிற்றில் ஒரு சோற்றுப்பருக்கைகூட இல்லை’ என்கிறது. கல்வியில் முன்னோடி, கடவுளின் தேசம், பொதுவுடைமை பூமி எனப் பல அடையாளங்களைக் கொண்ட கேரளா மீது அழியாத கறையாகப் படிந்துள்ளது மதுவின் கொடூர மரணம்.
22 அரசுத் துறைகளின் அதிகாரிகளுடன் மதுவின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்லியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். பழங்குடி மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர்.