திடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு!

ள்ளாட்சித் தேர்தல், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாகத் தள்ளிப் போய்க்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டுறவுச் சங்கங்களுக்கானத் தேர்தல் அறிவிப்பைத் திடீரென வெளியிட்டு அரசுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளது, தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் கூட்டுறவுத் துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை, மீன் வளத் துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் ஆயிரக்கணக்கான கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன. கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகளை மத்திய அரசின் நபார்டு வங்கி மேற்பார்வை செய்துவருகிறது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்கள், 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தன. அதே போல், பால்வளம், கைத்தறி உள்ளிட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்களும் அப்போதே முடிவடைந்தன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தி,  தலைவர் மற்றும் இயக்குநர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். இந்தத் தேர்தலைத் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் நடத்தும். இந்த அமைப்பும் இந்தியத் தேர்தல் ஆணையம் போன்றே தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!