மிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் முதல்வராக வரட்டும்!” - ரஜினி, கமலை சீண்டிய வைகோ

ஜினி பற்றிய அட்டைப்படக் கட்டுரையை ஆர்வத்துடன் வாங்கிப் படித்த கழுகார், அட்டையையும் பார்த்துச் சிரித்தார். அவரிடம், ‘‘எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழாவில், ரஜினியின் அரசியல் என்ட்ரி பேச்சு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதே?’’ என்றோம்.

‘‘ஆமாம்! மனதில் இதுவரை தேக்கி வைத்திருந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்துவிட்டார். இதுவரை சொல்லத் தயங்கியவற்றையும் பேசினார். வழக்கமாக, மிக ஜாக்கிரதையான வார்த்தைகளைப் போட்டு, ‘யாராவது தப்பாக எடுத்துக் கொள்வார்களோ’ என்று பயப்படுவார் அல்லவா? அதுமாதிரி இல்லாமல் தைரி யமாகப் பேசினார். தமிழ்நாட்டின் இரண்டு பெரிய சக்திகளையும், முக்கியத் தலைவர் களையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்து விட்டார் என்றே சொல்கிறார்கள்.”

‘‘இரண்டு சக்திகள் என்றால்..?”

“ஒரு காலத்தில் சொல்வார்கள் அல்லவா, ‘தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் கட்சி, கருணாநிதி கட்சின்னு ரெண்டு கட்சிகள்தான் உண்டு’ என்று. எம்.ஜி.ஆரையும் வானளாவப் புகழ்ந்தார். கருணாநிதியையும் புகழ்ந்து தள்ளினார். அதை வைத்துத்தான் சொல் கிறேன்,இரண்டு கட்சிக்காரர்களையும் இழுக்கும் வகையில் பேசினார் என்று!”

‘‘ரஜினியின் பேச்சு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!