கோல்மால் நடக்குது!

ரேஷன்கடை பணியாளர் நியமனத்தில் முறைகேடு

ள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடி(!) இது...

‘‘கவலைப்படாதீர்கள். இனிமேல், அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்லும் ஆட்களுக்குத்தான் அரசு வேலை வழங்கப்படும்’’ என்று கோபிசெட்டிப் பாளையம் அருகே, கவுந்தபாடியில் ஒரு மாதம் முன்பாக நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் (பிப். 11) பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். அதுபற்றி செங்கோட்டையனிடம் விளக்கம் கேட்க முயற்சி செய்தபோது, அவர் கிடைக்க வில்லை. அவருடைய அலுவலகத்துக்கு ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சி சார்பில் தொடர்புகொண்டு கேட்டபோது, செங்கோட்டையனின் ஆதரவாளர் ஒருவர், “கட்சி நிர்வாகி ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் போன்ற பணிநியமனங்கள் அ.தி.மு.க-வினர் கைகாட்டுபவர்களுக்கு வழங்கப்படும்’ என்று கூறினார்” எனச் சொல்லியிருக்கிறார்.

‘அமைச்சர் ஒன்றும் பொய் சொல்ல வில்லை. அவர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்’ என்பது இப்போது தெரியவந்துள்ளது. “கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில், அ.தி.மு.க-வினர் கைகாட்டுபவர்களுக்குத்தான் வேலை கிடைக்கிறது’’ என்ற தகவலை நம்மிடம் தெரிவித்தார் உள்விவரம் அறிந்த அதிகாரி ஒருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்