“லாரியை ஏத்திக் கொன்னாதான் சரிப்படுவானுவ!”

கொடூர மணல் கொலை

ணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் அரசு அதிகாரிகளையும் சமூக ஆர்வலர்களையும் மணல் மாஃபியாக்கள் தாக்குவதும், கொடூரமாகக் கொலை செய்வதும் நின்றபாடில்லை. இப்போது, மணல் மாஃபியாக்களால் நெல்லை மாவட்டத்தில் செல்லப்பா என்பவரின் உயிர் பறிபோயுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்லப்பா. நாங்குநேரி, திசையன்விளை பகுதிகளின் வழியாகச் செல்லும் நம்பியாறு பகுதியில் செல்லப்பாவின் தோட்டம் இருப்பதால், அந்தப் பகுதியில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இதற்காக ஊரில் உள்ள இளைஞர்களைக் கொண்டு ‘நம்பியாறு பாதுகாப்பு இயக்கம்’ என்கிற அமைப்பை உருவாக்கி மணல் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், ஏப்ரல் 25-தேதி அவரைத் திட்டமிட்டு மினி லாரியை ஏற்றிக் கொலை செய்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்