ரகசிய(!) குட்கா ஆலை... சி.பி.ஐ படையை முந்திக்கொண்ட தமிழக அரசு! | Gutka case Issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/05/2018)

ரகசிய(!) குட்கா ஆலை... சி.பி.ஐ படையை முந்திக்கொண்ட தமிழக அரசு!

‘‘குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. சென்னையில் சட்டவிரோதமாக குட்கா தயாரிக்க லஞ்சம் வாங்கிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் யார் யார் என்பதை சி.பி.ஐ விசாரிக்கும். அதுமட்டுமல்ல, சட்டவிரோத குட்கா தயாரிப்பு, வெளிமாநிலங்களிலிருந்து வருவது மற்றும் விற்பனை போன்றவை தொடர்பாகவும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல இடங்களில் குட்கா தொழிற்சாலைகள் ரகசியமாகச் செயல்பட்டு வருவதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது. அந்த ‘ரகசிய’ குட்கா ஆலைகளில் ரெய்டு நடத்த சி.பி.ஐ திட்டமிட்டிருந்த நிலையில், தமிழக அரசு முந்திக்கொண்டுள்ளது. அப்படித்தான், கோவை  அருகே ஒரு குட்கா ஆலையில் தமிழக போலீஸார் சோதனை நடத்தினர்’’ என அதிர்ச்சி கிளப்புகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

கோவை மாவட்டத்தில் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் பஞ்சாலை ஒன்று பல ஆண்டுகளாகப் பூட்டியே கிடந்தது. ஏப்ரல் 28-ம் தேதி, அதாவது குட்கா வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு மறுநாள், கோவை மாவட்ட எஸ்.பி மூர்த்தி தலைமையிலான போலீஸார், அந்தப் பஞ்சாலைக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தியதில், அங்கு ரகசியமாக குட்கா தயாரிக்கப்பட்டுவந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க