“அவர் ஓகே... இவர் வேண்டாம்!” - உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன அரசியல்

ச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பெண்கள் பதவிக்கு வருவது மிக அரிதான விஷயம். இந்து மல்ஹோத்ரா என்ற பெண் நீதிபதி உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கும் அதே தருணத்தில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதி கே.எம்.ஜோசப்பை நியமிக்காமல் மத்திய அரசு நிராகரித்த விவகாரம், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவைச் சேர்ந்த நீதிபதி கே.எம்.ஜோசப், இப்போது உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். 2016-ல், உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அவசரமாக மத்திய அரசு கொண்டு வந்ததை ரத்துசெய்து உத்தரவிட்டார் நீதிபதி கே.எம்.ஜோசப். அப்போதே இவர்மீது மத்திய அரசின் பார்வை படிந்தது. இவரையும், உச்ச நீதிமன்ற மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம், 2018 ஜனவரி 10-ம் தேதி பரிந்துரை செய்தது. ‘மற்ற உயர் நீதிமன்றங் களின் தலைமை நீதிபதிகளைவிட எல்லா வகையிலும் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி யேற்க ஜோசப் தகுதியானவர்’ என்பது கொலீஜியம் அளித்த பரிந்துரை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்