எடப்பாடிக்காக லேட்டாக ஆற்றில் இறங்கினாரா அழகர்?

துரை குலுங்கக் குலுங்க சித்திரைத் திருவிழாவை, எந்தவித வேறுபாடும் இல்லாமல் மாநகர மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதிலிருந்து பல சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், சித்திரைத் திருவிழாவையொட்டியும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. 

மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 27-ம் தேதி நடந்தபோது, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பது ஒரு சர்ச்சை. திருக்கல்யாண மண மேடை அருகே இருந்த சீரியல்செட் விளக்கில் தீப்பிடித்து, உடனே அணைக்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. திருக்கல்யாணத்துக்கு டிக்கெட் கட்டணமாக 500 ரூபாய்வரை வசூலித்ததற்கும் எதிர்ப்பு எழுந்தது. நம்மிடம் பேசிய இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு நிர்வாகி சுடலைமணி, ‘‘இப்படி இருந்தால் ஏழை எளிய மக்கள் எப்படி திருக்கல்யாணத்தைப் பார்க்க முடியும்? பத்தாயிரம் ரூபாய் மாடு, ஐயாயிரம் ரூபாய் ஆடு, பல்லாயிரம் ரூபாய் லேப்டாப், சைக்கிள் ஆகியவற்றை இலவசமாகத் தரும் அரசு, மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண மட்டும் கட்டணம் வசூலிப்பது ஏன்? இதுபற்றி அமைச்சர்கள், அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தோம், எந்த நடவடிக்கையும் இல்லை. திருக்கல்யாணம் முடிந்தவுடன் அருகிலுள்ள கொடி மண்டபத்தில் கல்யாண விருந்து வைக்க வேண்டும். ஆனால், அதை நீண்டகாலமாகச் செய்வதில்லை, வெளியே தனியார் மூலம் விருந்து வைக்கிறார்கள். அதைக் கோயிலில் செய்தால்தான் நாட்டுக்கு நல்லது. அதனால் மழை பொழியும் என்பது நம்பிக்கை. இப்படி, பல ஐதீகங்களைக் குழிதோண்டிப் புதைத்து வருகிறார்கள்’’ என்றார். இப்படி பாரபட்சம் காட்டுவதை இந்து அமைப்புகள் கண்டித்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick