காவிரி... மீண்டும் கண்ணாமூச்சி ஆடும் மத்திய அரசு!

ப்ரல் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை... உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்‌ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் பெஞ்ச் முன் ஆஜரானார் மத்திய அரசு வழக்கறிஞர் வாஸிம் காதிரி. காவிரி வழக்கை விசாரிக்கும் பெஞ்ச் இதுதான். ‘‘காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டம் உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு மேலும் இரு வாரங்கள் அவகாசம் வேண்டும். இதுதொடர்பான மனுவை இந்த பெஞ்ச்சில் இன்று மாலைக்குள் தாக்கல் செய்கிறோம்’’ என வாய்மொழியாகச் சொன்னார் வாஸிம் காதிரி.

அதற்கு அனுமதியளித்த தலைமை நீதிபதி, ‘‘நீங்கள் கொடுக்கும் மனுவை மே 3-ம் தேதிதான் விசாரிப்போம். ஆனால், எங்கள் பழைய உத்தரவு உறுதியானது’’ என்று சொன்னார். ‘வரைவுத் திட்டத்தை மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்ற உத்தரவைத்தான் தீபக் மிஸ்‌ரா நினைவுபடுத்தினார்.

இந்தத் தகவல் வெளியானதுமே தமிழகம் மீண்டும் கொந்தளிக்க ஆரம்பித்தது. மத்திய அரசு சார்பில் இப்படி ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக தமிழக அரசு வழக்கறிஞர் ஜி.உமாபதி தயாரானார். ஆனால், அன்று மாலையே ‘இப்படி ஒரு மனு தாக்கல் செய்யும் முடிவை மாற்றிக்கொண்டதாக’ வாஸிம் காதிரி சொல்லிவிட்டார். மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் ஆலோசனை செய்யாமல் இப்படி ஒரு முடிவை மத்திய நீர்வளத் துறை எடுத்ததாகவும், விஷயம் தெரிந்து வேணுகோபால் கண்டித்ததால் இந்த முடிவிலிருந்து பின்வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்