விகடன் லென்ஸ்: மிரட்டும் போதை பயங்கரம்!

ஒரே ஊசியில் உல்லாசம்... டேட்டிங் ரேப்... அபார்ஷனுக்கு குவியும் பெண்கள்

சம்பவம் 1: 2018 பிப்ரவரி இறுதி வாரம். கோவை வைசியாள் வீதியில் உள்ள வி.வி.எம். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும் பதற்றம். மருத்துவமனைப் பணியாளர்கள், பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள், மருத்துவமனை அருகில் குடியிருப்பவர்கள் என அத்தனை பேரிடமும் அந்தப் பதற்றம் தொற்றியிருந்தது. ஆபரேஷன் தியேட்டர்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மயக்க மருந்து ஒன்று பெருமளவில் திருடுபோனதும், மீண்டும் திருடுவதற்காக இரவு 12 மணிக்குமேல் கும்பல் ஒன்று அத்துமீறி மருத்துவமனைக்குள் நுழைந்ததும்தான், அந்தப் பதற்றத்துக்குக் காரணம். இதுபற்றி அந்தப் பகுதி மக்கள் புகார் கொடுத்தும், போலீஸ் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ‘காசா... பணமா... மயக்க மருந்துதானே’ என்று போலீஸார் அலட்சியமாக இருந்தார்களோ என்னவோ, ஒரு கான்ஸ்டபிளை அனுப்பி அந்த மருத்துவமனையை விசிட் அடிக்கச் சொல்லித் தன் கடமையை முடித்துக்கொண்டது போலீஸ்.

சம்பவம் 2: சில நாள்களுக்கு முன்பு, கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், குறிப்பிட்ட அந்த மயக்க மருந்தைத் திருடுவதற்கு முயற்சி செய்த கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்ற 24 வயது இளைஞரை, மருத்துவமனை ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரின் நண்பர்களான அஜய், மகேந்திரன் ஆகிய இருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களையும் போலீஸ் தூக்கியது. இதே குற்றச்சாட்டில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், ரோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மயக்க மருந்தை குளுக்கோஸுடன் கலந்து போதை ஊசியாக மாற்றி கல்லூரி மாணவர்களுக்கு இவர்கள் விற்பது அம்பலமாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick