தப்பிய 11... தப்புமா 18?

‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையுடன் நீடிக்குமா, அல்லது கவிழ்ந்துபோகுமா?’ என்பதை முடிவு செய்யும் இடமாக சென்னை உயர் நீதிமன்றம் மாறியிருக்கிறது. ஆட்சியின் அதிகார மையமான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் தீர்மா னிக்கப்படுவதைவிட, சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடத்துக் குள்தான் சமீபகாலங்களில் அதிகம் தீர்மானிக்கப்படுகின்றன. தமிழக ஆட்சியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் முக்கியமான வழக்குகள் இங்கே நடந்தன; நடக்கின்றன. குட்கா விவகாரத்தில் அரசுக்கு எதிராக சட்டமன்றத்துக்குள் கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு உரிமைமீறல் நோட்டீஸ் அனுப்பி யதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, சட்டமன்றத்தில் நடை பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க தொடர்ந்த வழக்கு, ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு... போன்றவை இதற்கு உதாரணங்கள்.

சட்டமன்றத்தில் ஜெயலலிதா உருவப்படம் வைத்தது தொடர்பான வழக்கு, ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கு என இரண்டு வழக்குகளில் ஏப்ரல் 27-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், ‘சபாநாயகரின் வேலையை நீதிமன்றம் எடுத்துச் செய்ய முடியாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இது அரசியல் பார்வையாளர்கள், எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், சமூக வலைத்தளங்கள் என அனைத்துத் தரப்பிலும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், ‘இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பைப்போலவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கிலும் தீர்ப்பு வெளியாகுமா’ என்பது பரவலான கேள்வியாக உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் தப்பினர்... தினகரன் பக்கம் போன 18 பேர் தப்புவார்களா? இதுபற்றி சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick