கழுகார் பதில்கள்!

உ.சிவன், வாகைக்குளம்.

எம்.ஜி.ஆர் மூன்று முறை முதல்வராக இருந்தபோதும், முழுமையாக ஐந்து ஆண்டுகள் நீடித்தாரா?


இல்லை!

1977 சட்டமன்றத் தேர்தலில் வென்றார் எம்.ஜி.ஆர். 1982 வரை அவரது ஆட்சி நீடித்திருக்க வேண்டும். ஆனால், எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிரதமர் இந்திரா காந்தி கலைத்து விட்டார். 1980 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் வென்றார். 1985 வரை அவரது ஆட்சி நீடித்திருக்க வேண்டும். 1984-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருந்ததாலும், உடல் நலமில்லாமல் அமெரிக்காவில் மருத்துவமனையில் எம்,ஜி.ஆர் இருந்ததாலும், முன்கூட்டியே இவர் களாகவே பதவி விலகி தேர்தலுக்குத் தயாரானார்கள். அந்தத் தேர்தலிலும் வென்றார் எம்.ஜி.ஆர். பதவிக்காலம் 1989 வரை இருந்தது. ஆனால், அவர் 1987 டிசம்பரில் இறந்து போனார். அதன்பிறகு, அ.தி.மு.க உடைந்து ஆட்சி கலைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர்., மூன்று முறை வென்றவர் என்பதும் உண்மை; ஆனால், மூன்று முறையும் அவர் முழுமையாக ஆளவில்லை என்பதும் முழு உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்