“கவர்னருடன் நிர்மலாதேவியை போட்டோ எடுக்க வைத்தது யார்?”

திடீர் திடுக் கேள்விகள்

“சிறைக்குள் நடந்த விசாரணையில்,  ‘பல்கலைக்கழகத்தின் முக்கியப் புள்ளிகள் சொன்னதால்தான், கவர்னர் பெயரை மாணவிகளிடம் கூறினேன். உயர் பதவிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இப்படி நடந்துகொண்டேன்’ என்று சந்தானம் கமிஷனிடம் நிர்மலாதேவி கூறியிருக்கிறார். ‘எங்கே கவர்னரை தனக்குத் தெரியும் என நிர்மலாதேவி சொல்லிவிடுவாரோ’ என்று சந்தானம் கமிஷன் நினைத்ததாம். அந்த வகையில், சந்தானம் கமிஷனுக்கு நிம்மதி” என்கிறார்கள் உள்விவரங்களை அறிந்தவர்கள்.

அதிகாரத்தில் இருக்கும் சிலரைக் குஷிப்படுத்த கல்லூரி மாணவிகளை அனுப்பி வைக்க நினைத்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து விசாரணை நடத்த கவர்னரால் நியமிக்கப்பட்ட சந்தானம் கமிஷனும், சி.பி.சி.ஐ.டி படையும் ஆரம்பத்தில் பரபரப்பாக இயங்கின. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகு, இவர்களின் வேகம் குறைந்துவிட்டது. ‘நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவர் கைதுடன் இந்த விவகாரம் முடிந்துவிடும். இதில் தொடர்புடைய பெரிய புள்ளிகள் தப்பித்துவிடுவார்கள்’ என்று பலராலும் பேசப்படுகிறது.

முருகன் வீட்டிலும், கருப்பசாமி வீட்டிலும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனையிட்டுள்ளனர். அதில் முக்கியமான ஆவணங்கள் எதுவும் கிடைத்தனவா என்பது தெரியவில்லை. இந்த நிலையில்தான், ‘‘நிர்மலாதேவி விவகாரத்தில் என் கணவரைப் பலிகடாவாக ஆக்கப்பார்க்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்கள், முழுமையான விசாரணை வேண்டும்’’ என்று சந்தானத்திடம் புகார் கொடுத்தார் முருகனின் மனைவி சுஜா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick