“போலி பாஸ்போர்ட்டில் பறக்கலாம் வாங்க!”

சென்னையில் சிக்கிய குடியுரிமை அதிகாரிகள்

போலி பாஸ்போர்ட்களை வைத்து வெளிநாடுகளுக்கு ஆட்களைக் ‘கடத்திவிடும்’ கும்பலைச் சேர்ந்த ஏழு பேர் போலீஸிடம் சிக்கியிருப்பதும், அவர்களில் இருவர் குடியுரிமைப் பணி அதிகாரிகள் என்பதும் சென்னை விமானநிலைய வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலி பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி சென்னை விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஆட்கள் அனுப்பப்படுவதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் சிலர் புகார் அளித்திருந்தனர். அதைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில்தான், இந்தக் கும்பல் பிடிபட்டுள்ளது. ‘‘மீனம்பாக்கம், நங்கநல்லூர் பகுதிகளில் போலி பாஸ்போர்ட்கள், போலி விசாக்களைச் சிலர் வைத்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இவற்றை வைத்து ஆட்களை வெளிநாடுகளுக்கு ‘கடத்திவிடும்’ வேலையை அவர்கள் செய்வதாகத் தெரியவந்தது. அதனால்தான் புகார் அளித்தோம்” என்று கமிஷனரிடம் புகார் அளித்தவர்கள் நம்மிடம் கூறினர்.

போலி பாஸ்போர்ட், போலி விசா ஆகியவற்றைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு ஆட்களை எப்படி அனுப்புகிறார்கள் என்பது பற்றி போலீஸ் வட்டாரத்தில்  விசாரித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick