“திற்பரப்பு அருவியை அழிக்கப் பார்க்கிறார்கள்!”

கொந்தளிக்கும் குமரி மக்கள்

“ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கும் திற்பரப்பு அருவி, ‘குமரியின் குற்றாலம்’ என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறது. இப்போது, இந்த அருவியை அழிக்கப் பார்க்கிறார்கள்” என்று கொந்தளிக்கிறார்கள் குமரி மாவட்ட மக்கள்.

குமரி மாவட்டத்தின் பெருமைகளுள் ஒன்று திற்பரப்பு அருவி. குற்றாலம் வறண்டு கிடக்கும் காலத்திலும், திற்பரப்பில் தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளால், ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை திற்பரப்பு பஞ்சாயத்துக்கு வருவாய் கிடைக்கிறது. இங்கிருக்கும் தடுப்பணையில் சுற்றுலா படகு சவாரிக்கு அனுமதி உண்டு.  இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் ரூபாயை கடையால் கிராமப் பஞ்சாயத்து வருவாயாக ஈட்டுகிறது. கோடைக்கு இதமாகக் குளியல்போடத் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து திற்பரப்புக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் ஏறுமுகமாகவே உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்