மிஸ்டர் மியாவ் | mr.miyav - cinema news - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2018)

மிஸ்டர் மியாவ்

பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம், ‘சாஹோ’. இதன் படப்பிடிப்பு துபாயில் பரபரப்பாக நடந்துவருகிறது. 50 நாள்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த ஷெட்யூலில் சண்டைக்காட்சியை ரூ.90 கோடி செலவில் படமாக்கி வருகிறார்களாம். இக்காட்சியைப் பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் கென்னி பேட்ஸ் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடி, ஷ்ரதா கபூர்.

அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இதை, கே.வி.ஆனந்த் தன் ட்வீட்டில் உறுதிப்படுத்தியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கே.வி.ஆனந்த் - சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கு இது மூன்றாவது படம்.

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் தன் போர்ஷனை நடித்து முடித்துவிட்டார் ஜோதிகா. இதைத் தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள ‘காற்றின் மொழி’ படத்தின் படப்பிடிப்பு ஜூனில் துவங்குகிறது.