பழனிக்கும் மொட்டை... திருத்தணிக்கும் மொட்டை!

சேதாரக் கணக்கில் 12 கிலோ தங்கம்

‘காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு ஐம்பொன் உற்சவர் சிலை செய்வதற்காக நன்கொடை என்ற பெயரில் கிலோகணக்கில் திரட்டிய தங்கத்தில் மோசடி நடந்துள்ளது’ என்கிற புகாரை அடுத்து, தமிழக அறநிலையத் துறையின் தலைமை ஸ்தபதி முத்தையாமீது வழக்குப் பதிவானது. தோண்டத்தோண்ட புதையல் கிடைப்பது போல, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல் தோண்டத் தோண்ட, ஸ்தபதி முத்தையா பற்றி பல புகார்கள் வெளியில் வந்தன.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் விவகாரம் வெளியில் வந்ததுமே, இதை ஒன்றுமில்லாமல் செய்ய ஏகப்பட்ட முயற்சிகள் நடந்தன. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் மூலவர் சிலைக்காக நன்கொடையாகப் பெறப்பட்ட 100 கிலோ தங்கத்தில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டார். அவருடன், அறநிலையத் துறை நிர்வாக ஆணையராக இருந்த கே.கே.ராஜாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இதேபோல தமிழகம் முழுக்க அறநிலையத் துறை கோயில் பணிகளில் முத்தையா ஸ்தபதியுடன் கூட்டுசேர்ந்து பணம் பார்த்த அறநிலையத்துறை அதிகாரிகள், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் தொடர்புடையவர்கள், ஆன்மிகவாதிகள், உதவி ஸ்தபதிகள் என்று பலரின் பட்டியலைச் சேகரித்து வருகிறது சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்