வழக்கறிஞர்மீதே பாய்ந்த ‘உபா’ சட்டம்! - போலீஸ் போட்டது பொய் வழக்கா? | UAPA act: The Ridiculous Case of Advocate Murugan - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2018)

வழக்கறிஞர்மீதே பாய்ந்த ‘உபா’ சட்டம்! - போலீஸ் போட்டது பொய் வழக்கா?

‘தமிழகத்தில் ‘உபா’ (UAPA) சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் நபர்’ என்ற அடையாளம் பெருமைக்குரியதா எனத் தெரியவில்லை. அந்த அடையாளத்துக்குரியவர், வழக்கறிஞர் முருகன். அது என்ன உபா, யார் இந்த முருகன் என்பவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு.

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற புகாரில் கடந்த வருடம் கைது செய்யப் பட்டவர் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன். 480 நாள்களுக்கும் மேலாக திருச்சி சிறையில் இருந்துவரும் நிலையில், தொடர் சட்டப் போராட்டத்துக்குப் பின் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. ஆனாலும், வெளியில்வர முடியாத வகையில், இன்னொரு வழக்கும் அவர்மீது பதிவு செய்யப்பட்டு, அதற்காகப் போடப்பட்ட ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க