“அழைத்து அவமதித்தார்கள்!” - தேசியத் திரைப்பட விருது சர்ச்சை

‘‘நாங்கள் மதிப்புமிக்க தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டவர்கள். ஆனால், எங்களை அழைத்து அவமதித்தார்கள். முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், இரண்டு மணி நேரம் செலவிட்டு விருதுகளை ஜனாதிபதியால் வழங்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களின் கைகளால் விருது வாங்குவது பெருமை. அமைச்சர் என்பவர், ஓர் அரசியல் கட்சியின் பிரதிநிதி. அவர் கையால் விருது வழங்கும்போது, அதில் அரசியல் சேர்ந்துவிடுகிறது. அதனால்தான் எதிர்த்தோம்’’ என்கிறார், கௌஷிக் கங்குலி. இவரின் ‘நகர்கீர்தன்’ திரைப்படம் நான்கு விருதுகளை வென்றது.

சிறந்த ஆவணப்படத்துக்கு விருது வென்ற ஆர்.சி.சுரேஷ், ‘‘ஜனாதிபதியின் கைகளால் விருது தரப்படும் என ஏப்ரல் 18-ம் தேதியே எங்களுக்குக் கடிதம் அனுப்பினார்கள். 64 ஆண்டுகளாக இதுதான் நடைமுறை. ஜனாதிபதி எங்கள் கையில் விருது கொடுக்கும் அந்த ஒரு நிமிடக் காட்சியைக் காண்பதற்கு எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என எல்லோரும் டெல்லி வந்தார்கள். ஆனால், ஜனாதிபதியின் கைகளால் தராததால், அந்த விருதின் மதிப்பே போய்விட்டது’’ என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்