மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்? | Mr.Kazhugu - Politics & Current affairs | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2018)

மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்?

ழுகார் நுழைந்ததும், ‘‘அரசியல் கூட்டணிகள் மாறுகின்றனவா?” என்ற கேள்வியை மையமாகக்் கேட்டு வைத்தோம். நாம் எதைக் கேட்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டவராக, ‘‘ஓ! அதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார். எதை வைத்து என்று கேட்பதற்குள், கழுகாரே தொடங்கிவிட்டார்.

‘‘சென்னையில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் ஸ்டாலினும் ராமதாஸும் ஒரே மேடையில் உட்கார்ந்து இருந்ததை வைத்துத்தான் அரசியல் கூட்டணிகள் மாறுகின்றனவா என்று கேட்கிறீரா? கூட்டணிகள் மாறுகின்றனவா, கூட்டணிகள் சேர்கின்றனவா என்பது போகப் போகத்தான் தெரியும். ‘இந்திய வணிகர் சங்க உரிமை மீட்பு மாநாடு’ என்ற பெயரில், சென்னை வேலப்பன்சாவடியில் வணிகர் சங்கப் பேர மைப்பின் 35-வது வணிகர்தின மாநில மாநாடு நடந்தது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர், அந்த அமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா.  இந்த நிகழ்ச்சிக்கு அனைத்துக் கட்சித் தலைவர் களையும் அவர் அழைத்திருந்தார். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்துள்ள கமல்ஹாசன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள்  கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர். அதாவது, ராமதாஸ், ஜி.கே.வாசன், கமல்ஹாசன் ஆகியோரைத் தவிர, மற்ற அனைவரும் தி.மு.க கூட்டணியினர்தான்.”

‘‘இந்த மாநாட்டில் பங்கேற்க ராமதாஸ் எப்படி ஒப்புக்கொண்டார்?”

‘‘அதுதான் பெரும் அரசியலாகப் பார்க்கப் படுகிறது. பொதுவாகவே, தி.மு.க-வும் பா.ம.க-வும் எலியும் பூனையுமாக இருக்கும் கட்சிகள். கருணா நிதியை ராமதாஸும், ஸ்டாலினை அன்புமணியும் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். சமீபத்தில்கூட, காவிரிப் பிரச்னையில் மோதல் ஏற்பட்டது. ராமதாஸுக்கு துரைமுருகன் பதில் சொன்னார். லோக் ஆயுக்தா பற்றி ஸ்டாலின் பேசியதை ராமதாஸ் கிண்டலடித்தார். இந்தக் கோபத்துக்குக் காரணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க-வும் அதிக நெருக்கமாக இருப்பதுதான். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் தீர்ப்பு குறித்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க கலந்து கொண்டதையும், பா.ம.க வெறுப்புடன் கவனித்தது. ஆனால்...”

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close