கம்பேரிஸன் கோவாலு!

ர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கே பிரசாரம் செய்துவரும் மோடி, வழக்கம்போல ஒரு கருத்து முத்தை உதிர்த்திருக்கிறார். ‘‘பி.ஜே.பி எப்போதும் பெண்களுக்கு மரியாதை அளிக்கும். அதனால்தான், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரைப் பாதுகாப்புத்துறை அமைச்சராக்கி இருக்கிறோம்’’ என அவர் சொல்ல, ‘பாஸ்... நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு. வழக்கம்போல உளறிட்டீங்க’ என கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள். ‘விடுப்பா விடுப்பா’ என பி.ஜே.பி-க்கு வேறு சில ஐடியாக்கள் தருகிறேன் கோவாலுவாகிய நான்!

‘பாதுகாப்புத்துறை அமைச்சராக என்ன? கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமராக ஆக்கிய பெருமையே பி.ஜே.பி-க்கு உண்டு’ என்று பிரசாரம் செய்யலாம். 1996-ல் பிரதமராக இருந்த வாஜ்பாய் பெருந்தன்மையாக 13 நாள்களில் ராஜினாமா செய்ததால்தான், கர்நாடகாவின் தேவ கவுடா பிரதமரானார் என அடித்துவிடலாம்.

கன்னட மக்களை மதிப்பதால்தான்... அதாவது கன்னட மக்களின் வாக்குகளை மதிப்பதால்தான், கர்நாடகாவில் பிறந்த காவிரியைக் கேட் தாண்டவிடாமல் சாக்கு சொல்லிச் சமாளித்துவருகிறோம்’ என்று பொய்... இதுல பொய் என்ன இருக்கு? என உண்மையைச் சொல்லிப் பிரசாரம் செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick