கர்நாடகத் தேர்தல் களத்தில் 25 தமிழர்கள்... - ஜெயிக்கப் போவது யாரு?

காவிரி விவகாரம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், பல்வேறு கட்சிகளின் சார்பில் தமிழர்கள் 25 பேர் களத்தில் நிற்கிறார்கள். ‘ஜெயிக்கப் போவது யாரு’ என்பதுதான் அங்கே தமிழர்கள் மத்தியில் உலவும் கேள்வி.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயல் பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மை யாக வசிக்கிறார்கள். அந்தத் தொகுதியில் தமிழர்களே அதிக முறை வெற்றியும் பெற்றுள் ளனர். அதேபோல், பெங்களூரு மாநகரத்துக்கு உள்பட்ட காந்தி நகர், சிவாஜி நகர், ராஜாஜி நகர், சாந்தி நகர், புலிகேசி நகர், சி.வி.ராமன் நகர்  உள்ளிட்ட தொகுதிகளிலும் கணிசமான அளவில் தமிழர்கள் வசிக்கிறார்கள். பொது இடங்களில் தமிழில் பேசுவதே ஆபத்தான விஷயமாகக் கருதப்படும் பெங்களூரு நகரின் பெரும்பாலான தொகுதிகளில் தமிழர்களே முடிவைத் தீர்மானிப் பவர்களாக இருக்கிறார்கள். இதனால், காங்கிரஸ், பி.ஜே.பி, மதச்சார்பற்ற ஜனதா தளம் என முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழில் பேசி வாக்கு சேகரிக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்