“தப்பானவங்களை அடிச்சுத் துரத்த சித்தர்கள் வர்றாங்க!” - ரங்கமலை ரகசியம் | Rangamalai Sithargal secrets - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“தப்பானவங்களை அடிச்சுத் துரத்த சித்தர்கள் வர்றாங்க!” - ரங்கமலை ரகசியம்

‘‘ரங்கமலையில் எக்கச்சக்கமான சித்தர்கள் கூடுவிட்டுக் கூடு பாய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க. முன்னாடி, அவங்க மலையைவிட்டு அதிகம் இறங்கிக் கீழே வர மாட்டாங்க. இப்போ அடிக்கடி வர்றாங்க. அவங்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமான்னு ஊர்ப்பட்ட கூட்டம் இப்போ ரங்கமலையை ரங்கராட்டினம் மாதிரி சுற்ற ஆரம்பிச்சிருக்கு’’ என அமானுஷ்யத்தை அள்ளித் தெளித்துப் பேசுகிறார்கள் அடிவாரத்தில் குடியிருக்கும் மக்கள்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் ஆண்டிபட்டிக்கோட்டை அருகே சுமார் 3,500 மீட்டர் உயரத்துக்குக் கூம்பு வடிவில் வான் முட்டி நிற்கிறது ரங்கமலை. வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மலையைச் சுற்றி இப்போது ஏகப்பட்ட மர்ம விஷயங்கள் கச்சைக் கட்டத் தொடங்க, பேருந்தில் ரங்கமலைக்கு டிக்கெட் போட்டோம்.

மலை அடிவாரத்தில் மருந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவருடன் மருதாம்பிகை, முருகன் உள்ளிட்ட கடவுள்களும் கொலுவிருக்கி றார்கள். பூஜை கனஜோராக நடக்க, அந்த அந்தி நேரத்துக்கே அங்கே நல்ல கூட்டம். அவர்களில் அநேகம் பேர் ‘சித்தர்கள் காட்சியைக் கண்டு தெய்வீக கடாட்சம் பெற வந்தவர்கள்’ என்று சொல்லப்பட்டது. கோயிலை ஒட்டி மலைக்குச் செல்வதற்கு ஏனோதானோவென செதுக்கப்பட்ட படிகள் தொடங்குகின்றன. ஆனால், அந்தப் படிக்கட்டு ஆரம்பிக்கும் இடத்தில் கேட் போட்டுப் பூட்டி, ‘உத்தரவின்றி மலை ஏற அனுமதியில்லை’ என்று எச்சரிக்கை வாசகம் அடங்கிய போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது. மலைக்கு மேலே 2,500 மீட்டர் உயரத்தில் மல்லீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick