நிலம் குளமாக மாறுது! - ரோல் மாடல் கிராமங்கள்

“தண்ணீர் பிரச்னை அதிகம் உள்ள எங்கள் கிராமத்தில் குளம் அமைக்க நாங்கள் முடிவு செய்தோம். கிராம மக்களைச் சந்தித்து இது பற்றிப் பேசினோம். அவர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து, அரசு தரிசு நிலமான 35 ஏக்கரைத் தேர்வு செய்து, 25 ஏக்கரில் நீர்ப்பிடிப்புப் பகுதி அமைக்க முடிவு செய்தோம். கௌசிகா நதி அருகில் இருக்கிறது என்பதால், ‘கௌசிகா குளம்’ என்று இதற்கு பெயரிடப்போகிறோம். கௌசிகா நதி மற்றும் அருகிலுள்ள இரு ஓடைகளிலிருந்து இந்த குளத்துக்கு தண்ணீர் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இந்தப் பகுதியைச் சுத்தம் செய்து, தற்போது 3,000 சதுர அடிக்குக் குளம் அமைத்துள்ளோம்” என்று உற்சாகத்துடன் பேசினார், ‘கெளசிகா குளம் பாதுகாப்பு குழு’வைச் சேர்ந்த சதாசிவம்.

கோவை – திருப்பூர் எல்லையில் கௌசிகா நதி செல்லும் வழியில் சிறிய கிராமங்கள் நிறைய உள்ளன. விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்த இந்த கிராமங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு வந்ததன் விளைவாக, விவசாயத்துக்கு விடைகொடுக்கப்பட்டு விசைத்தறிகள் முளைத்தன. இந்நிலையில்தான், குளத்துப்பாளையம், முருகன்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், வடுகபாளையம், புதுநல்லூர், தெக்கலூர், பணப்பாளையம், கோவிந்தாபுரம், சூரிபாளையம், ஆலம்பாளையம், வெங்கல்பாளையம், கிட்டாம்பாளையம் உள்பட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அரசு நிலத்தில் குளம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குளத்துப்பாளையம் கிராமத்துக்கு அருகே இந்தக் குளம் அமைகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்