“போலீஸ் வர்றதுக்குள்ள அவளை பெட்ரோல் ஊத்தி எரிச்சுடுங்க!”

வாட்ஸ்அப் வதந்தியால் பலியாகும் அப்பாவிகள்

சையாகப் பார்த்த குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்ததற்காகக் கொலை செய்யப்படுவோம் என யாராலும் நினைத்துப்பார்க்க முடியுமா?

சென்னையிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு அருகேயுள்ள அத்திமூர் ரேணுகாம்பாள் குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல் வைக்க ஐந்து பேர் வந்தார்கள். அவர்களில் இருவர் மலேசியாவில் செட்டில் ஆனவர்கள் என்பதால், ஃபாரீன் சாக்லேட்களுடன் வந்திருந்தனர். வந்த இடத்தில் இவர்கள் சாக்லேட் சாப்பிட்டதை, கோயிலில் விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதி குழந்தைகள் பார்த்துள்ளனர். அதனால், அவர்களுக்கும் சாக்லேட் கொடுத்துள்ளனர். அதைப் பார்த்த ஊர் மக்கள், ‘குழந்தை கடத்த வந்ததாக’க் குற்றம்சாட்டி அவர்களை அடித்தனர். பயந்து போன ஐந்து பேரும் காரில் கிளம்ப, விடாமல் துரத்திச் சென்று காரை மடக்கிப் பிடித்து உடைத்துச் சேதப்படுத்தினர். அவர்கள் சொன்ன எதையும் கேட்காமல் அடித்து உதைத்தனர். இதில் ருக்குமணி என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே பலியானார். மே 9-ம் தேதி நடந்த கொடூரம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick