“பகவான் என் தலையில் எழுதியதை மாற்ற முடியுமா?”

திருட்டில் பொன்விழா கண்ட 84 வயது முதியவர்

‘ஆளைப் பார்த்து யாரையும் எடை போடக்கூடாது’ என்று பொதுவாகச் சொல்வார்கள். அதை நிரூபித்துள்ளார், சென்னையில் சிக்கிய ஒரு திருடர். அவர் பற்றிய தகவல்கள், போலீஸாரைத் திக்குமுக்காட வைத்துள்ளது. சென்னை சங்கர் நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தோஷம் கழிப்பதாகக்கூறி திருட முயன்ற 84 வயது முதியவரை, பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரைப் பார்த்ததும் ஒட்டுமொத்த போலீஸாருக்கும் பெரும் அதிர்ச்சி. பொதுமக்கள் பிடித்துக்கொடுத்தது சாதாரண திருடன் அல்ல. ஆந்திர போலீஸாரும் தமிழக போலீஸாரும் பல ஆண்டுகளாகத் தேடிவரும் பிரபல திருடன் சில்வர் சீனிவாசன். தொடர்ந்து போலீஸார் அவரிடம் விசாரித்தபோது, மயிலாப்பூரில் ராஜகோபாலன் என்பவரின் வீட்டில் நகைகளைத் திருடியதாக சீனிவாசன் வாக்குமூலம் கொடுத்தார். உடனடியாக அவரை மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் சங்கர் நகர் போலீஸார் ஒப்படைத்தனர்.
 
சில்வர் சீனிவாசனின் ஃப்ளாஷ்பேக்கை நம்மிடம் விவரித்தனர் போலீஸார். ‘‘சீனிவாசனின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம், நெல்லூரை அடுத்த மூலப்பேட்டை. கும்பகோணத்தில் ஏழாம் வகுப்புவரை படித்தார். சிறுவயதிலேயே பெற்றோர் இறந்துவிட்டதால், வேலைதேடி பல இடங்களுக்குச் சென்றார். ஹோட்டலில் வேலை கிடைத்தது. அங்கு வேலைபார்த்த ஒருவரிடமிருந்து ஜோதிடம் கற்றுக்கொண்டார். பிறகு, ஹோட்டல் வேலையை விட்டுவிட்டு ஜோதிடம் பார்க்கத் தொடங்கினார். திருமணத் தடைக்கான காரணத்தை ஜாதகத்தைப் பார்த்து அலசி ஆராய்ந்து சொல்வதில் தனக்கென்று தனிமுத்திரை பதித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick